Sunday, 16 December 2018

'நாகினி' மவுனி ராய்க்கும், டிவி நடிகருக்கும் திருமணமா?

Tuesday, 20 December, 2016

நடிகை மவுனி ராய்க்கும், டிவி நடிகர் மோஹித் ரெய்னாவுக்கும் திருமணம்



'நாகினி' மவுனி ராய்க்கும், டிவி நடிகருக்கும் திருமணமா?

 நாகினி தொடர் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய்க்கும், டிவி நடிகர் மோஹித் ரெய்னாவுக்கும் திருமணம் என்று தகவல் வெளியானது.

நாகினி என்கிற ஒரேயொரு டிவி தொடர் மூலம் பிரபலமானவர் மவுனி ராய். இந்தி சீரியலான நாகினி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

மவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.



திருமணம்


மவுனி ராயும், மோஹித்தும் தங்களின் காதலை ரகசியமாக வைத்துள்ளபோதிலும் அவர்கள் பல இடங்களுக்கு ஜோடி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

மவுனி ராய்


மோஹித்துடனான திருமணம் குறித்து மவுனி ராய் மறைமுகமாக பேசினார். ஆனால் மோஹித்தோ மவுனியுடன் திருமணம் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கூறிவிட்டார்.



மோஹித் ரெய்னா


மவுனியுடன் திருமணம் என்ற வதந்தி எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதற்கு அவசரப்படவில்லை என்று மோஹித் தெரிவித்துள்ளார்.




News
Sponsors
ST COURIER VELLORE FORT
SK Batteries
Unique Furniture
Post Free Ads

OurVellore © 2017. Privacy Policy

.
Designed by: KAYATech