Sunday, 9 December 2018

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் தானம்

Friday, 29 December, 2017

வேலூரில், விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புக்கள், தானமாக வழங்கப்பட்டன.



வேலூர் : 29/12/2017 - வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்தவர் விஜய், சத்துவாச்சாரியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் காய்கறி வாங்குவதற்காக வேலூர் மார்க்கெட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். தன்னுடன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ஆனந்தன் (வயது 14), இவருடைய நண்பர் வ.உ.சி.நகரை சேர்ந்த பாலாஜி (19) ஆகியோரையும் அழைத்து சென்றார்.

காகிதப்பட்டறையில் வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது உரசிச்சென்றதில் 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது வேலூரில் இருந்து சத்துவாச்சாரி நோக்கி வந்த வேன் மாணவன் ஆனந்தன் தலைமீது ஏறிவிட்டது. இதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பலியானான். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

அவர்களில் பாலாஜி உடல்நிலை மோசமானதால் அவர் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று காலையில் மூளைச்சாவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தந்தை ஏழுமலை, தாய் மரகதம் ஆகியோர் தெரிவித்தனர்.

அதன்பேரில் பாலாஜியின் இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. அதில் ஒரு சிறுநீரகம் கல்லீரல் ஆகியவை சி.எம்.சி.க்கும், இருதயம், நுரையீரல் ஆகியவை சென்னை மலர் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

News
Sponsors
SK Batteries
ST COURIER VELLORE FORT
Unique Furniture
Post Free Ads

OurVellore © 2017. Privacy Policy

.
Designed by: KAYATech