Tuesday, 19 June 2018

பொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு

Saturday, 13 January, 2018

பொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு



பொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு. சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள்.

 இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய பொங்கல் விழா. இந்திர விழா அக்காலத்தில் கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டதாம். இந்திரனுக்கான விழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்திரனின் கரும்பு வில்லை நினைவு கூரும் விதமாக கரும்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

 உத்தராயண காலத்தின் தொடக்க நாட்களை போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள் (மாட்டுப் பொங்கல்) என கொண்டாடுகிறார்கள் இப்போது. தற்போது காணும் பொங்கலும் கடைசி நாள் விழாவாக இணைந்துள்ளது. 

 . போகி
----------------------:

 போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. போக்கி என்பதுதான் மருவி, போகி என்றாகி விட்டது. அதாவது பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படை இது. அசுத்தங்களைப் போக்கி சுத்தத்தை வரவேற்பது எனபது இந்தப் பண்டிகையின் தாத்பர்யம். அசுத்தம் என்பது வீட்டில் மட்டுமல்லாது நமது மனதிலும் உள்ள அசுத்தங்களைப் போக்குவது, துயரங்கள், துன்பங்கள், கவலைகளைப் போக்குவது என்றும் பொருளாகும். போகிப் பண்டிகை பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும் இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும்.இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்பாடு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.நாமும் குடும்பத்துடன் போகி மற்றும் பொங்கல் ...மாட்டுப்பொங்கல்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடி இறையருள் பெறுவோம்..
News
Sponsors
SK Batteries
Post Free Ads
Unique Furniture

OurVellore © 2017. Privacy Policy

.
Designed by: KAYATech