Saturday, 22 September 2018

பிளஸ்-2 தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது- தேர்வு அட்டவணை வெளியீடு

Monday, 19 December, 2016

தமிழ்நாடு, புதுச்சேரி பிளஸ்-2 தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது-



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 இறுதித் தேர்வுகள் 2012 மார்ச் மாதம் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். இந்தத் தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் தேர்வறையில் மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப் பார்க்க காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை 10 நிமிடங்கள் கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது. அதே போல விடைத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை, 5 நிமிஷங்கள் அவகாசமும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை:

மார்ச் 8ம் தேதி - தமிழ் முதல் தாள்.

9ம் தேதி - தமிழ் இரண்டாம் தாள்.

 12ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.

13ம் தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள்.

 16ம் தேதி - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்.

19ம் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

20ம் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

 22ம் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.

 26ம் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.

28ம் தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழித் தேர்வு, தட்டச்சு தேர்வு. 30ம் தேதி - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

News
Sponsors
SK Batteries
Post Free Ads
Unique Furniture
ST COURIER VELLORE FORT

OurVellore © 2017. Privacy Policy

.
Designed by: KAYATech